குறுஞ்செய்திகள்

எனக்காய்ப் பயணிக்கும்
வார்த்தைகள் நான்
நினைப்பதையெல்லாம்
அறிவித்தால் போதும் !

பேசிய வார்த்தைகளை விட
அனுப்பிய வார்த்தைகளுக்கு
 வலியும் வலிமையையும்
அதிகம்!

பிடித்தவைகள்...
பிடிக்காதவைகள்....
கெஞ்சல்கள்...
கொஞ்சல்கள்...

அனுப்பியவைகள்
அனுப்பத் தவறியவைகள்
அனைத்திலும் உணர்வுகள்
ஒளிந்து கிடக்கின்றன...

அனைத்தும் பதிந்தே
கிடக்கின்றன...
மறைந்தும் பொதிந்தே
சுமக்கின்றன...

தினமும்
ஒரு நொடி ஒலித்து
மறு நொடி பிரசவிக்கும்
குறுஞ்செய்திகள்.....