நினைவெல்லாம் நீ என்றாய் !
நித்தம் நீயே என்றாய்!
நாளை நான் உனதென்றாள்!
நிஜங்கள் மறந்தேன் என்றாள்!
நேற்றைய கனவிலும் நீயே என்றாள்!
நெற்றி உனக்கே என்றாள்!
நேசம் நிஜங்கள் என்றாள்!
நாமே நிரந்தரம் என்றாள்!
இப்போதோ,
நினைக்கக் கூட நேரமில்லை பாவம் அவளுக்கு!
அவள் கணவன் ! அவள் குழந்தை...அவளும் பெண்தானே!